தமிழக அரசு சத்துணவு பணியாளர்கள் காலி பணியிடங்களை மொத்தமாக நிரப்புவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. அதன் படி மொத்தம் உள்ள 8997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்கள் மாதம் 3000 தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கும் நிலையில் இந்தப் பணியில் நியமனம் ‌ செய்யப்படுபவர்கள் 12 மாதங்கள் வரை வேலை பார்க்க வேண்டும்.

இவர்களில் திருப்திகரமாக வேலை பார்ப்பவர்கள் தகுதியானவர்களாக கருதப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமாக மாதம் ரூ. 3000 முதல் ரூ.9000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.