தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக படித்த இளைஞர்கள் பணி நியமனம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். பிப்ரவரி 11ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பல துறைகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.

அந்த முகாமில் பேசிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன், இதுவரை வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரம் இளைஞர்கள் தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. என்ற தொழில் துறையில் தமிழ்நாடு முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.