தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழர் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும். அதன்படி சர்க்கரை, கரும்பு, அரிசி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவதோடு ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும். அந்த வகையில் அடுத்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரொக்க பரிசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த பணத்தை வங்கி கணக்குகளில் அரசு நேரடியாக செலுத்தும் என்று தகவல் வெளியான நிலையில் இதற்காக கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்களுக்கு கட்டாயம் கணக்கு இருக்க வேண்டும் என்ற ஒரு செய்தி பரவி வருகிறது. ஆனால் அது உண்மை கிடையாதாம். பொதுவாக வங்கி கணக்கு இருந்தாலே அதில் பணம் செலுத்தப்படும். இதற்காக கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் இது பற்றி பரவும் தகவல் வெறும் வதந்தி தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ரொக்க பணம் நேரடியாக வழங்கப்படுமா அல்லது வங்கி கணக்கில் செலுத்தப்படுமா என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.