தமிழகத்தில் தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகவும் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகவும் உள்ளதால் பள்ளி மாணவர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இயக்குனரகத்திலிருந்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான என் எஸ் எஸ் சிறப்பு முகாம் காலாண்டு தேர்வு விடுமுறையின் 7 நாட்களில் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறைகள் மேலும் நீட்டிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.