தமிழகத்தில் குறிப்பிட்ட அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள் அல்லது ஏதாவது நிகழ்ச்சியின் போது உள்ளூர் விடுமுறை அளிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்துள்ளது. அந்த வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று தஞ்சை சத்குரு தியாகராஜரின் 176வது ஆராதனை விழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை நடைபெற உள்ளது. இதனையடுத்து இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக வருகின்ற 21ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.