தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதை தொடர்ந்து வருகிற 14-ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் வருகிற 15-ஆம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இன்று சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.