தமிழகத்தில் பல பகுதிகளிலும் இருந்து விவசாயிகளிடம் நேரடியாக பாலை கொள்முதல் செய்து அவற்றை பதப்படுத்தி பால் மற்றும் பால் பொருட்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தனியார் நிறுவன பால் மற்றும் பால் பொருட்களுடன் ஒப்பிடும்போது ஆவின் பால் விலை குறைவு தான். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆவின் பால் விலை உயரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழகத்தில் ஆவின் பால் விலையை உயர்த்துவதற்கு அரசு எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபடவில்லை. சமூக வலைத்தளங்களில் பரவும் எந்த ஒரு வதந்தியையும் மக்கள் நம்ப வேண்டாம். தனியார் நிறுவனத்தின் நெய் ஒரு லிட்டர் ஆயிரம் ரூபாய் விலையிலும் ஆவினில் நெய் ஒரு லிட்டர் 700 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஆவின் பொருள்களின் தரத்திலும் அளவிலும் அரசு எந்த சமரசமும் செய்யவில்லை. ஆவின் பால் விலை உயர்வு என்பது கற்பனை மட்டும் தான் ஆவின் பால் விலை உயர்த்தப்படாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.