தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவ-மாணவிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கட்டணத்தை இன்று ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம், அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண், பட்டியலுக்கான கட்டணம் போன்றவற்றை அரசு தேர்வுகள் இணையதளத்தில் செலுத்தவும். மேலும் சந்தேகங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு தேர்வுகள் இயக்கக ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.