தமிழகத்தில் ரஜினிகாந்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைத்த நிலையில் நடிகர் விஜய் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 என்று தில் ராஜூ கூறியது பெரும் சர்ச்சையாக மாறியது. அதன் பிறகு வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய் தான் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். இதைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சூர்யா ரசிகர்கள் தற்போது போஸ்டர் அடித்து ஒட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது நம்பர் ஒன் நம்பர் 2 எல்லாம் பாப்பா விளையாட்டு. I am the one only super one என்ற வாசகத்தோடு சூர்யா ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர் தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.