தமிழ் சினிமாவில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகூ அமலாபால். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. கடந்த வருடம் ஜெகத் தேசாய் என்பவரை நடிகை அமலாபால் திருமணம் செய்து கொண்ட நிலையில், கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த 11 ஆம் தேதி  ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை அமலாபால் அறிவித்துள்ள நிலையில் அந்த குழந்தைக்கு இலை என பெயர் வைத்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது காடுகள் மற்றும் இயற்கை வளங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அமலாபால் அத்தகைய இடங்களுக்கு சென்று போட்டோ வெளியிடுவது வழக்கம். மேலும் தங்களுக்கு இயற்கையின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் தங்களுடைய மகனும் அப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவே இயற்கை சார்ந்த பெயரான இலை என்பதை அவர்களுக்கு சூட்டியுள்ளனர். மேலும் அமலாபாலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்