தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைப் போலவே தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை உருவாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பெரிய கோவில் வளாகம் முழுவதும் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும்,துணிக்கடை போன்ற கடைகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் மற்றும் சிறிய கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும் எனவும் மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.