பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் மீன் குழம்பு மண்பானையும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரிலீசான நட்சத்திரம் நகர்கிறது, கமல்ஹாசன் நடித்த விக்ரம் நடித்த திரைப்படங்களில் காளிதாஸ் நடித்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திலும் அவருக்கு தம்பியாக நடித்துள்ளார்.

பிரபல மாடல் அழகியான தாரணி காளிங்கராயர் என்பவரை காளிதாஸ் காதலித்து வந்தார். தாரிணி ஊத்துக்குளி ஜமீன் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவருக்கும் இன்று கேரளா குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, கேரள பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ முகமது ரியாஸ், திரையுலக பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.