ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று இரவு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா மோதிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அமெரிக்கா தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் முன்னேறும் நிலை இருந்தது. இதனால் இந்த போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.

இதனால் அமெரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அணி சூப்பர் 8 முன்னேறி அசத்தியது. இதனால் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் டி20 உலக கோப்பை போட்டியை விட்டு வெளியேறியுள்ளது. மேலும் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணி டி20 போட்டியிலிருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.