தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி கொடுக்க விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் தேவை. மேலும் அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.