சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படம் வெளியாகி விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி பொங்கல் தினத்தன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 படத்தின் டீசரை வெளியிட்டது. இந்த படம் தொடர்பாக அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது நயன்தாரா இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் அவருக்கு பதிலாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.