தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் வரலட்சுமி. இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழியிட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் தற்போது படங்களில் வெள்ளி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கிறார். இவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள்.

இவரிடம் ஒரு பேட்டியில் தந்தை வழியில் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன். அரசியலுக்கு படித்தவர்கள் வரவேண்டும். ஜெயலலிதா தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு அயன் லேடி. அவரைப் போன்ற சினிமாவில் சாதிக்க வேண்டும். மேலும் அவரைப் போல அரசியலுக்கும் வர வேண்டும் என்று கூறினார்.