ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்துவதை முன்னிட்டு குறும்பட போட்டியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த வருடம் ஜி 20 அமைப்பின் இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்துகின்றது. இதனைத் தொடர்ந்து குறும்பட போட்டி நாட்டில் உள்ள எந்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் பங்கேற்கலாம் எனவும் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்தியா ஜி20 மாநாட்டை தலைமையேற்று நடத்துவது குறித்தும் அது குறிப்பிட்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்று குறித்தும் குறும்படங்கள் இடம்பெற வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த குறும்பட வீடியோக்களை வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் இணைய வழியில் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.