ரிலையன்ஸ் ஜியோ அண்மையில் Jio Saavn சந்தா உள்பட வரம்பற்ற டேட்டா அழைப்பு மற்றும் தொகுக்கப்பட்ட பலன்களை விரும்பும் பயனர்களுக்காக புது ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டங்கள் ரூ.269-ல் துவங்கி ரூ.789 வரை அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் முதல் காலாண்டு பலன்களை வழங்குகிறது. இதில் 2 திட்டங்களில் குறிப்பாக வரம்பற்ற இணைய அழைப்பு மற்றும் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியாகும் கூடுதல் நன்மைகளை தேடும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.739 மற்றும் ரூ.789 விலையில் இந்த 2 திட்டங்களானது வழங்கப்படுகிறது. ரூ.739 மற்றும் ரூ.789 விலையில் இத்திட்டங்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும், 5g டேட்டா நன்மைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. இத்திட்டங்களை தேர்ந்தெடுக்கும் ஜியோ ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் ஒரு பகுதியாக Jio Saavn Pro சந்தாக்களையும் பெறுவர்.

JioSaavn Pro என்பது பிரபல ஸ்ட்ரீமிங் சேவை ஆகும். இது பயனர்களுக்கு விளம்பரமில்லா இசை அனுபவம், வரம்பற்ற பதிவிறக்கங்கள், சிறந்த ஆஃப்லைன் இசைத் தரம் மற்றும் JioTunesன் அம்சங்களை வழங்குகிறது. jio ரூ 269 திட்டமானது 1.5 தினசரி டேட்டா கேப் உடன் 28 தினங்கள் பேக் வேலிடிட்டியை வழங்குகிறது. ஜியோ ரூ 529 திட்டத்தின் கீழ் ஜியோ பயனர்கள் தினசரி 1.5 ஜிபி அதிவேக டேட்டாவுடன் 56 நாட்கள் செல்லுபடி ஆகும். அதேபோல் jio ரூ.589 திட்டத்தில் ப்ரீபெய்ட் பேக் வாயிலாக பயனாளர்கள் 56 தினங்களுக்கு தினசரி 2gp டேட்டா கேப் பெறுகின்றனர்.