இப்போது ​​5 வருடங்களுக்கு அஞ்சல் அலுவலக நேர வைப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு 7.5% வட்டியானது கிடைக்கும். ரூ.5,00,000 போஸ்ட் ஆஃபீஸ் எஃப்டியில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்நிலையில் 5 வருடங்களுக்கு பின் 7.5% வட்டியாக ரூ. 2,24,974 கிடைக்கும். முதிர்வுக்கான அசல் மற்றும் வட்டி சேர்த்து மொத்தமாக ரூ.7,24,974 கிடைக்கும்.

எனினும் நீங்கள் இத்தொகையை இரட்டிப்பாக்க விரும்பினால், திட்டம் முதிர்ச்சியடைந்த பின் இந்த தொகையை நீங்கள் திரும்ப எடுக்க வேண்டியதில்லை. அதனை எடுக்காமல் நீங்கள் மீண்டும் 5 வருடங்களுக்கு டெபாசிட் செய்யவேண்டும். 5 வருடங்களுக்கு பின் தற்போதைய வட்டி விகிதத்தின் படி, இதற்கு ரூ. 3,26,201 வட்டி சேர்க்கப்படும். இதன் வாயிலாக ரூ. 5 லட்சம் முதலீட்டுக்கு வட்டியாக மட்டும் ரூ.5,51,175 கிடைக்கும். 10 வருடங்களுக்கு பின் மொத்தம் ரூ.10,51,175 கிடைக்கும்.