தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் நீட் தேர்வு போன்றவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் விஜய் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை செய்வது, பால் விலை மற்றும் மின்சார கட்டணம் உயர்வு போன்றவைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார். அதாவது பிற மாநிலங்கள் எல்லாம் ஜாதி வாடி கணக்கெடுப்பை நடத்தும்போது மத்திய அரசின் மீது திமுக தேவை இல்லாமல் பழி போட்டு ஜாதிவாரி கணக்கை நடத்தாமல் காலம் தாழ்த்துவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளதோடு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று விஜய் திமுக அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.