
பாலமேடு பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் பலர் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசை நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் பிடித்துள்ளார்.
மேலும் இவர் மொத்தம் 14 காளைகளை அடக்கியுள்ளார். அதன் பிறகு இரண்டாம் இடத்தை துளசி என்பவர் 12 காளைகளை அடக்கி பிடித்துள்ளார். அதன்பிறகு பிரபா என்பவர் 11 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.