ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள எஸ்பிஐ கிளார்க் தேர்வை வேறு தேதியில் நடத்த வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் 355 பணியிடங்கள் உட்பட மொத்தம் 5,486 பணியிடங்களுக்கு வரும் 15ஆம் தேதி முதன்மைத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் நாளான 15ஆம் தேதி தேர்வு நடத்துவதற்கு வங்கி அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள எஸ்பிஐ கிளார்க் தேர்வை வேறு தேதியில் நடத்த எஸ்பிஐ வங்கி நிர்வாகத்திடம் பேசி உள்ளதாக வங்கி அதிகாரிகள் சங்க முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ தகவல் தெரிவித்துள்ளார்..