தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுசுடன் இணைந்து குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துவரும் நிலையில் பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது காலில் பெரிய கட்டு போட்டுள்ளார். இது தொடர்பான போட்டோவை நடிகை ராஷ்மிகா மந்தனா instagramயில் பதிவிட்டுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்புக்கு செல்வேன் என்றும் என்னுடைய சிக்கந்தர் மற்றும் குபேரா ஆகிய பட இயக்குனர்களிடம் மன்னிப்பு கேட்பேன் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை ராஸ்மிகா சோகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தி வருகிறார்கள்.