சொத்தை விற்று வாழ்கிறேன்…. புதுசா எதையுமே வாங்கல…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, சொத்தை விற்றுள்ளேனே தவிர எதையும் புதிதாக வாங்கவில்லை என கூறியுள்ளார்.

அதில், “தான் போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலான 2006 வேட்புமனுவில் என்ன குறிப்பிட்டேனோ அதே சொத்துக்கள் தான் இப்போதும் உள்ளது. இடையில் ஒரு சொத்தை விற்றேன். 2006 முதல் இன்றுவரை தனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட யார் பெயரிலும் எந்த சொத்தும் பதிவு செய்யப்படவில்லை, வாங்கவும் இல்லை” என குறிப்பிட்டார்.

Leave a Reply