கேரள மாநிலம் காசர்கோடு சீமேனி கனியாந்தோலில்உள்ள குவாரி ஒன்றில் மூழ்கி 11 வயது இரட்டை சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சீமேனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்- புஷ்பா தம்பதிகளின் இரட்டை குழந்தைகள் சுதேவ், ஸ்ரீதேவ் இவர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் குழந்தைகள் சைக்கிள் உடன் விளையாடுவதற்காக வெளியே சென்றுள்ளார்கள்.

மாலையில் இருவரும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடி பிறகு குவாரிக்கு அருகே சைக்கிள்கள் கிடந்துள்ளது. இதனை அடுத்து சிறுவர்களின் சடலங்கள் அருகில் உள்ள குவாரியில் மூழ்கி நிலையில் உயிரிழந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களை காப்பாற்ற முடியவில்லை இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.