தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் வாரிசு படத்தின் முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி நடிகர் சரத்குமார் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார். இவருக்கு ஸ்ரீகாந்த், ஷாம், விஜய் என்ற மூன்று மகன்கள் இருக்கிறார்கள். நடிகர் சரத்குமார் ‌ தன்னை போல் தன்னுடைய மூன்று மகன்களும் தொழிலதிபராக மாற வேண்டும் என்று நினைக்கிறார்.

அதோடு குடும்பம் மற்றும் தொழிலை கவனித்துக் கொள்வதற்காக தன்னுடைய மூன்று மகன்களுக்கு இடையே போட்டி வைத்து ஒருவரை வாரிசாக அறிவிக்க சரத்குமார் முடிவு செய்கிறார். இது விஜய்க்கு சுத்தமாக பிடிக்காததால் தந்தை சரத்குமார் உடன் சண்டை போட்டுவிட்டு அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். விஜய் வீட்டை விட்டு வெளியே சென்று 7 வருடங்கள் ஆன நிலையில், சரத்குமாருக்கு 60-வது திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. அந்த சமயத்தில் தாயின் கட்டாயத்தின் பெயரில் நடிகர் விஜய் மீண்டும் வீட்டிற்கு வருகிறார்.

அப்போது ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் இருவரும் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதால் சரத்குமார் தன்னுடைய வாரிசாக விஜயை அறிவித்தார். இதனால் அண்ணன்கள் இரண்டு பேரும் விஜய்க்கு எதிராக திரும்புகின்றனர். இறுதியில் பிரிந்த குடும்பத்தை நடிகர் விஜய் ஒன்று சேர்த்தாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை. இந்நிலையில் நடிகர் விஜய் படத்தில் தன்னுடைய வழக்கமான பாணியில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

செண்டிமெண்ட் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகளில் நடிகர் விஜய் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதைக்கு நடிகர் சரத்குமார் பக்கபலம். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு உரிய வேலையை சிறப்பான முறையில் செய்து இருக்கிறார்கள். நடிகர் எஸ்.ஜே சூர்யா ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்தாலும் கைதட்டும் அளவுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்துமே கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது. மேலும் மொத்தத்தில் சொல்லப்போனால் வாரிசு வழக்கமான வெற்றி என கூறலாம்.