பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கந்தி கோட்டா என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது.
இங்கு பொன்னாறு நதி பாயும் அழகிய பள்ளத்தாக்கு உள்ள நிலையில் இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்கள் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு காரில் செல்ல செல்ல முடியாத சூழல் இருப்பதால் நடிகர் கமல்ஹாசனுக்காக ஹெலிகாப்டர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்த படத்தின் ஷூட்டிங் இல் கலந்து கொள்வதற்காக தினசரி ஹெலிகாப்டரில் தான் சென்று வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.