சென்னையில் உள்ள நெம்மேலி பகுதியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் மீட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துக்குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மார்ச் 15ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை தாம்பரம், அடையாறு, பெருங்குடி, ஆலந்தூர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை முன்னதாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் அவசர தேவைக்கு https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து குடிநீரை மக்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.