மதுரை ரயில்வே நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 9-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6:15 மணிக்கு புறப்படும் ரயில் 30 நிமிடம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்படும். அதன் பிறகு பிப்ரவரி 15-ஆம் தேதி தேனியில் இருந்து மதுரைக்கு ரயில் சேவை இயக்கப்படாது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை இரு மார்க்கமாகவும் ரயில் இயக்கப்படுவது  நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் போடி-சென்னை ரயில் சேவை தொடங்கப்பட இருந்த நிலையில், அந்த ரயில் சேவை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 12 வருடங்களாக ரயில் சேவைக்காக காத்திருந்த போடி மக்களுக்கு ரயில் சேவை ஒத்திவைக்கப்பட்டது என்ற அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.