சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வரியைப்பு புகார்கள் காரணமாக சென்னை ஸ்ரீபெரும்புதூரில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். அதனைப் போலவே கந்தன்சாவடி, தரமணி மற்றும் பெருங்குடி உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.