தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நான் கூறியது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி உறுதியான இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் கிடையாது. கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது.

தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் உள்ள நிலையில் தற்போதைய தொகுதிகள் குறித்து முதல் உரையும் முடிவுரையும் எழுத முடியாது. 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும். நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் நான் பேசி வருகின்றேன். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவை இருந்தாலும் எனக்கு கவலை கிடையாது. தற்போது செல்லும் பாதை 20 ஆண்டுகளுக்குப் பிறகு சரியாக இருக்காது. வானதி சீனிவாசனும் கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதில் ஊழல் பட்டியல் மற்றும் வாட்ச் பில் என அனைத்தும் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் யார் மீதும் தனக்கு கோபம் கிடையாது. அவரவர்கள் அவரவர் அரசியலை செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.