சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் அமர்ந்தவாறு தூக்கிட்டு நிலையில் இருப்பதை பணியாளர் பார்த்துள்ளார். பின்னர் இந்த விஷயம் பரவியதையடுத்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்த தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தற்கொலைக்கான காரணம் குறித்தும், அவர் யார் என்பதும் குறித்தும் விசாரிக்கின்றனர்.