நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதாவது பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் என்று கூறிய சீமான் பாலியல் இச்சை வரும் போதெல்லாம் பெற்ற தாய் மற்றும் மகள் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று பெரியார் சொன்னதாக கூறினார்.

இவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்து ஒரு எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, பகுத்தறிவு-சமத்துவம்-பெண் விடுதலை-அறிவியல் வளர்ச்சி தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியார். அதற்கு எதிரான கருத்தியலை கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். மேலும் சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டு தான் திருந்துவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.