இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகள் செய்வதை அனைவருமே தொடங்கிவிட்டனர்.  இது பணத்தை எளிதாக, நினைத்த நேரத்தில் நொடிப்பொழுதில் அனுப்ப வசதியாக உள்ளது.  நம்முடைய ஸ்மார்ட் ஃபோன்களில் பயன்படுத்தும் பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனை அனைத்துமே யு பி ஐ பயன்படுத்தி தான் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் யுபிஐ சேவை 10 நாடுகளில் வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு இந்தியர்கள் தங்கள் வங்கி கணக்கில் இந்திய யுபிஐ சேவையுடன் இணைத்து பணம் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஹாங்காங், ஓமன், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கொண்டுவரப்படவுள்ளது.