தெலுங்கு சினிமாவின்  முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர் இன்று காலை வெளியே வந்தார். நேற்று கைது செய்யப்பட்ட அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் ஜாமீன் தொடர்பான ஆவணம் அதிகாரிகளை சென்றடையாததால் நேற்று ஒருநாள் இரவு முழுவதும் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்தார். அதன் பின் இன்று காலை சிறையிலிருந்து அவர் வெளியே வந்தார்.

அவர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் வீட்டிற்கு சென்றபோது குடும்பத்தினர் அவரை பார்த்தவுடன் கண்கலங்கி கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முதலில் அவருடைய தம்பி அல்லு அரவிந்த் ‌ வந்த நிலையில் பின்னர் அவருடைய குழந்தைகள் மற்றும் மனைவி கட்டிப்பிடித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் முன்னதாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டபோது அவருடைய மனைவி அழுது கொண்டிருந்த நிலையில் அவரை கட்டி அணைத்து முத்தமிட்டு ஆறுதல் கூறிவிட்டு அல்லு அர்ஜுன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.