தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சாய் பல்லவி படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு மருத்துவராக செட்டிலாக மருத்துவமனை கட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாக பல செய்திகள் வெளியானது. இதற்கு பதிலளித்துள்ள சாய் பல்லவி, எம்பிபிஎஸ் படித்திருந்தாலும் நடிகையாக வேண்டும் என்பதே எனது ஆசை. பெற்றோர்களும் சம்மதித்து விட்டனர். எனது கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் விரும்ப வேண்டும். நல்ல கதைகள் அமைந்தால் எந்த மொழியிலும் நடிக்க தயார் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.