ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இரு அணியின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சி முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் பஸ்ஸில் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது திடீரென அவர்கள் சென்ற பேருந்து டிராபிக்கில் சிக்கிக்கொண்டது. அப்போது ரசிகர் ஒருவர் ஹீரோ போல் வந்து டிராபிக்கை சரி செய்தார்.

அவருடைய பெயர் சன்னி. அவர் ட்ராபிக்கை செயலி செய்ததை பார்த்து பேருந்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதோடு அவருக்கு நன்றியையும் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் நன்றி சன்னி பாய் எனவும் பதிவிடப்பட்டுள்ளது.