கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரில் தீபாவளி பண்டிகையின் போது நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நண்பர்கள் சிலர் மது குடித்துவிட்டு பட்டாசு வெடிக்க தயாராகினர். அப்போது சபரீஷ் என்பவரிடம் சக நண்பர்கள் ஒரு சவால் விட்டனர். அதாவது பட்டாசு பெட்டியின் மீது அமர்ந்து அதனை வெடிக்க செய்யும்போது சற்றும் பதறாமல் அசையாமல் அந்த இடத்தில் உட்கார வேண்டும் என்று சவால் விட்டனர். இதனை செய்தால் ஒரு ஆட்டோவை பரிசாக தருவதாகவும் கூறினார். அப்போது சபரீஷ் மது போதையில் இருந்ததால் சவாலுக்கு ஒப்புக்கொண்டு பட்டாசு பெட்டியின் மேல் அமர்ந்தார்.

சக நண்பர்கள் பட்டாசை கொளுத்தி விட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்ற நிலையில் சபரீஷ் பட்டாசு வெடிக்கும் போது அதில் அமர்ந்து அப்படியே அந்த இடத்தில் சுருண்டு கீழே விழுந்தார். பின்னர் பட்டாசு சத்தம் என்றது நண்பர்கள் ஓடி வந்து பார்த்த போது சபரீஷ் மயக்க நிலையில் இருந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.