தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டில் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி மற்றும் ரகு தாத்தா போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூடியூபர் இர்ஃபான் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில் தான் போட்ட பதிவை இர்பான் நீக்கியதோடு பகிரங்க மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இர்பான் துபாய்க்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷூம் சென்றுள்ளார். மேலும் இவர்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இர்பான் பகிர்ந்த தோடு super nice person என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.