சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். அரசு விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது: ‘புதுவை அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000-ம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் குடும்ப தலைவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த உள்ளோம். அதேபோல பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்பு நிதி வழங்கும் திட்டம், நடைமுறையில் உள்ள திட்டத்தையும், அறிவித்த திட்டங்களையும் செயல்படுத்துவோம்’ என்று தெரிவித்தார்.