சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக நாட்கள் ஓடிய படம் என்ற சாதனையையும் படைத்தது. இது மலையாள சினிமாவில் வெளியான மணிசித்ரதாழு என்ற படத்தின் ரீமேக் ஆகும். மலையாள சினிமாவில் நடிகை ஷோபனா சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் தமிழில் ஜோதிகா சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பி. வாசு தற்போது சந்திரமுகி 2 படத்தை இயக்கி வரும் நிலையில் ரஜினி மற்றும் ஜோதிகா நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதால் ஹீரோவாக ராகவா லாரன்சும், சந்திரமுகியாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முக்கிய வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.‌ இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், கங்கனாவை நடிகை ஜோதிகா முன்பு ஒரு வீடியோவில் புகழ்ந்து பேசியதை கங்கனா பகிர்ந்து நடிகை ஜோதிகா ஒரு அற்புதமான நடிகை என்று கூறியுள்ளார். அதோடு நான் தினந்தோறும் ஜோதிகாவின் நடிப்பை பார்த்து வருகிறேன். அவருக்கு ஈடாக கண்டிப்பாக நடிக்கவே முடியாது. ஜோதிகாவின் நடிப்பு வியப்பை அளிக்கக்கூடியது. மேலும் ஜோதிகாவின் நடிப்பை ஈடு செய்வது சாத்தியமற்றது என்று பதிவிட்டுள்ளார்.