மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், மூத்த வழக்கறிஞர் புதிதாக சேர இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையில், குறுக்கு விசாரணைக்காக முக்கிய சாட்சி ஒருவரை ஏற்கனவே அழைத்த நிலையில், விசாரணையை எவ்வாறு ஒத்திவைப்பது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து விசாரணையை நவம்பர் 15க்கு ஒத்திவைத்து, அதற்குப் பிறகு எந்தவிதமான  அவகாசமும் கேட்கக் கூடாது என உத்தரவிட்டது.