சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதிய உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தின் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கற்பித்தால் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஊதியம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.