காஞ்சிபுரம் அருகே ஆடி வெள்ளி அம்மன் வளைகாப்பு கோவில் விழாவிற்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகையில் ஆபாச பட நடிகை போட்டோவால் பரபரப்பு…

காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் அம்மனுக்கு ஆடி வெள்ளிய வளைகாப்பு நிகழ்ச்சிக்காக விளம்பர பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவைச் சேர்ந்த. ஆபாச பட நடிகை மீயா காலிஃபா  மஞ்சள் நிற உடை அணிந்து பால்குடம் கொண்டு வருவது போல படம் வைக்கப்பட்டுள்ளது.

இதை பார்த்து அப்பகுதிமக்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் செய்தி அந்தப் பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தகவல் அறிந்த போலீசார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பதாகையை அப்புறப்படுத்தினார். மேலும் இந்த பதாகை யார் வைத்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்கள்.