தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் நேற்று இரவு அது கரையை கடந்தது. தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்வது மற்றும் மின்சாரம் துண்டிப்பு போன்றவைகள் ஏற்பட்டுள்ளது.

புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மின்சார வாரியத்தின் உதவியை நாடுவது எப்படி என்பது சிலருக்கு புரியாமல் இருக்கும். கவலைப்பட வேண்டாம் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டால் போதும். அதாவது மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க தமிழக மின்சார வாரியம் நம்பர் அறிவித்துள்ளது. மேலும் அதன்படி 9498794987 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.