தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் வடசென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாமக நிறுவனர் ராமதாசை கடுமையாக விமர்சித்தார்.

அன்புமணி என்ற பெயரை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியது ஜெயலலிதா தான். ஜெயலலிதா மட்டும் இல்லை என்றால் பாமக என்ற கட்சியை வெளியிலேயே தெரிந்திருக்காது. கொள்கையாவது, கூட்டணி ஆவது, வெங்காயமாவது என செயல்படுபவர் ராமதாஸ் தான். பாமகவில் ஐந்து எம்எல்ஏக்கள் உள்ளனர். தனித்து நின்றிருந்தால் ஒரு எம்எல்ஏ ஜெயித்திருக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.