கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை குறித்த இந்த பதிவில் பார்ப்போம். மெக்ஸிகோ போன்ற பல நாடுகளில் காயங்களை குணப்படுத்த கொய்யாப்பழம் பயன்படுத்தப்படுகிறது. மாதவிடாய் பிடிப்புகள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் நன்மை பயக்கும். கொய்யா பழத்தில் கொழுப்பு மிக குறைவு. அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம். இதில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து உள்ளது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. மேலும் மெக்னீசியம் பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்களும் உள்ளது. இரைப்பை குடல் ஆரோக்கியத்திற்கு கொய்யாப்பழம் நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது பலப்படுத்துகிறது. கொய்யாப்பழம் தினமும் சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். கொய்யா பழத்தின் 10 நன்மைகள் பற்றி பார்ப்போம்.

1. கொய்யா பழம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

2. மாதவிடாய் காலகட்டங்களில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

3. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

4. எடை மேலாண்மைக்கு உதவியாக இருக்கும்.

5. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற உதவுகிறது.

6. சருமத்தை பிரகாசமாக்கி ஆரோக்கியமாக்கும்.

7. இரத்த சோகைக்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

8. நல்ல குடல் நுண்ணுயிரிகளை அதிகரிக்கிறது.

9. மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

10. புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது.