ஹைதராபாத்தை சேர்ந்த சச்சின் என்பவர் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். சச்சினுக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் சினேகா கர்ப்பமானதால் சந்தேகமடைந்த சச்சின் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். தற்போது சினேகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் சச்சின் சினேகாவை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு கர்ப்பிணி மனைவி என்று பார்க்காமல் அவரது வயிற்றில் அமர்ந்து தலையணையால் முகத்தை மூடி கொடூரமாக கொலை செய்துள்ளார். அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையும் வெளியே வந்து உயிரிழந்தது.

இதனையடுத்து கொலை சம்பவத்தை மறைத்து விபத்து நடந்தது போல காட்டுவதற்காக கேஸ் சிலிண்டரை கசிய வைத்துவிட்டு சச்சின் தப்பி ஓடினார். கேஸ் வாசனை அதிகமாக வந்ததால் அக்கம் பக்கத்தினர் சச்சின்  வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சினேகா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சினேகா மற்றும் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்