திருத்தணி கந்தசாமி தெருவில் டெல்லி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டெல்லி பாபுவை இரண்டு பேர் ஓட ஓட விரட்டி கத்தியால் வெட்டியுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அதிமுக பிரமுகரான நாகூர் பிச்சை என்பவரது மகன் முகமது யூசுப் அலி என்பவர் தனது நண்பருடன் இணைந்து டில்லி பாபுவை வெட்டியது தெரியவந்தது.
நேற்று முகமது யூசுப் அலி, அவரது கூட்டாளியான 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பாரதியார் தெருவில் மதுபோதையில் பைக்கை சாலையில் நிறுத்தி முகமதுவும் 17 வயது சிறுவனும் அந்த வழியாக சென்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை டெல்லி பாபு தட்டி கேட்டார். இதனால் இருவரும் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.