உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லசாரி கேட் பகுதியில் மொயின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஸ்மா என்ற மனைவியும், அப்சா (8), அஜிஷா (4), அதிபா (3) என்ற மூன்று குழந்தைகளும் இருந்துள்ளனர். இவர்களுடைய வீடு நேற்று முன் தினம் முதல் பூட்டி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டில் மொயினும் அவருடைய மனைவியும் பிணமாக கிடந்த நிலையில் வீட்டிலிருந்த ஒரு படுக்கை பெட்டிக்குள் குழந்தைகள் மூவரும் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடம்பில் பயங்கர காயங்கள் இருந்ததால் அவர்களை அடித்து கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரண நடத்தி வரும் நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.